டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூரை சேர்ந்த இருவரின் உடல் ஒப்படைப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 11:46 am
2-people-body-handed-over-their-relatives

டெல்லி உணவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

திருப்பூர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும்  அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த அரவிந்த சுகுமாரன் (40) மற்றும் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் நந்தகுமார் (33) ஆகியோர் டெல்லியில் ஏற்றுமதியாளர் கூட்டத்திற்காக கடந்த திங்களன்று கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். திங்களன்று மதியம் முதல் மாலை வரை டெல்லியில் உள்ள தனியார் பிரபல விடுதியில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டத்தை முடித்து விட்டு திங்களன்று இரவு டெல்லி கரோல் பார்க் பகுதியிலுள்ள அர்பிட் பேலஸ் உணவு விடுதியில் தங்கியுள்ளனர்.

அந்த உணவு  விடுதியில் செவ்வாயன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிந்தனர். அதில் திருப்பூரை சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் உடல்கள் சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியிலிருந்து அவர்களது உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

பின்னர் இருவரது உடல்களும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பார்த்து இருவீட்டாரும் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close