பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். குன்றின் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல, பக்தர்களின் வசதிக்காக ரோப் கார், மின் இழுவை ரயில் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதால், பக்தர்கள் மின் இழுவை ரயில், மற்றும் படிப்பதையை பயன்படுத்தும் படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
newstm.in