சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:33 pm
forest-officers-trying-to-catch-a-chinna-thambi

சின்னதம்பியை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

உடுமலையில் சுற்றித்திரியும் சின்ன தம்பி யானையை முகாமுக்கு அழைத்தும் செல்லும்படி  சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, உடுமலைப்பேட்டை கண்ணாடி புதூரில் இன்று காலை சின்னத்தம்பியை வனத்துறையினுடைய கால்நடை மருத்துவக்குழு மேற்பார்வையிட்டனர். 

கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பரிசோதிக்க, டாக்டர் சி.அசோகன் தலைமையிலான குழுவும், வனத்துறையினரும் முகாமிட்டுள்ளனர். மேலும், சின்னத்தம்பியை இடமாற்றுவதற்காக கலீம் மற்றும் சுயம்பு ஆகிய கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close