திருச்சியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இளம் ஜோடிகளை கோவிலுக்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சில தரப்பினரிடையே எதிர்ப்பும் வலுத்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் காதலர்கள் மற்றும் இளம் ஜோடிகளுக்கு தாலி கயிறு வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என இந்து தேசிய கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காதலர் தினத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டபடி கையில் தாலி கயிறுடன் ஊர்வலமாக வந்த இந்து தேசிய கட்சியினரை போலீசார் தடுத்தி நிறுத்தி சமாதனப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
பின்னர், தாயுமான சுவாமி கோவில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வருகை தந்த இளம் ஜோடிகளை போலீசார் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
newstm.in