ஆற்றில் நடராஜர், பிள்ளையார் சிலைகள் கண்டெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 09:12 am
find-the-statues

வாத்தலை காவிரி ஆற்று மணலில் உலோகத்தாலான நடராஜர் மற்றும் பிள்ளையார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காவிரி ஆற்றில்  தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால்,  வாத்தலை பகுதியில் மீனவர்கள்  மீன் பிடித்துள்ளனர். அப்போது, ஆற்று மணலில் புதைந்திருந்த நாடராஜர், பிள்ளையார் சிலைகள் மீனவர் மருத முத்து என்பவரின் வலையில் சிக்கியது.

இதையடுத்து சிலைகளை ஆற்றின் கரையோரம் எடுத்து வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் சிலைகளை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close