காவல்நிலையத்தின் கழிவறையில் ஆய்வாளர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 03:52 pm
inspector-s-body-was-found-in-police-station-toilet

ஆவடி சிறப்பு காவல்படை அலுவலகத்தின் கழிவறையில் காவல் ஆய்வாளர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

ஆவடி நந்தவன மேட்டூரைச் சேர்ந்தவர் முனுசாமி (57). உளுந்தூர் பேட்டையில் உள்ள 10வது பட்டாலியனில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெறுவது தொடர்பாக விண்ணப்பிக்க ஆவடி சிறப்பு காவல்படை 2வது பட்டாலியனில் உள்ள ஏ.டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே, அவரது மனைவி, மகனுடன் வெளியூர் செல்ல இருந்ததால், தான் 2வது பட்டாலியனில் உள்ள காவல் ஓய்வறையில் தங்கி, காலையில் பணிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளியூர் சென்ற மனைவி மற்றும் மகனுக்கு முனுசாமியிடம் இருந்து எந்த தகவலும் செல்லவில்லை. அவரது அலைபேசியும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், முனுசாமியை தொடர்பு கொள்ள முடியாத அவரது குடும்பத்தினர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  

புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்றிரவு 2வது பட்டாலியனில் பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையில் முனுசாமியின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். தொடர்ந்து கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close