போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற 2 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 04:07 pm
2-people-arrested-for-fake-documents

திருச்சி விமான நிலையத்தில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற 2 பேரை குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லவிருந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரை குடியேற்றத்துறை அதிகாரிகள் (immigration department) சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விருதுநகரை சேர்ந்த தயாபரனை கைது செய்தனர். 

இதேபோல், சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்பேர்ட் பெற்றுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close