இரத்தம் ஏற்றியதால் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை: கோவை அரசு மருத்துவமனை

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 05:14 pm
the-baby-did-not-have-hiv-infection-due-to-blood-transfer

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்த புகாருக்கு மருத்துவமனையின் முதல்வர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்தம் ஏற்றபட்டுள்ளது. தற்போது, மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோருக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.  குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வேறு எங்கும் சிகிச்சைக்காக அழைத்து செல்லவில்லை என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதில் பிரச்சனை இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு  எப்படியோ தான் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியிருப்பதாக மருத்துவமனையில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் அசோகன் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close