மதுரை: பாஜக தலைவர் அமித்ஷா-ஓ.பி.எஸ் சந்திப்பு

  டேவிட்   | Last Modified : 22 Feb, 2019 02:55 pm
madurai-amit-sha-met-ops-at-airport

மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் சந்தித்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் மதுரை அடுத்த எலியார்பத்தியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, பெரம்பலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட 18 நாடாளுமன்ற தொகுதிகளின் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அமைப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள், வியூகங்கள், அரசின் நலத்திட்டங்களை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது என்பது குறித்து பல ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அமித்ஷா ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக அமித்ஷா மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்து அடைந்த தமிழக துணை முதல்வரும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் இருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே அதிமுக பாஜக உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் வருகிற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி எப்படி செயல்படவேண்டும், கூட்டணி கட்சிகளோடு எப்படி இந்த தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பது குறித்து தமிழக துணை முதல்வர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அமித் ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராமநாதபுரம் சென்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close