திருச்சி விமானநிலையத்தில் 1.40 கிலோ தங்கம்: மலேசிய பெண் கைது!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 01:38 pm
gold-chain-seized-in-trichy-airport

திருச்சி விமானநிலையத்தில் ரூ.34.69 லட்சம் மதிப்புடைய 1.40 கிலோ தங்க சங்கிலியை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா பயணிகளிடம் திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மலேசியாவை சேர்ந்த ஃபெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண் தான் அணிந்திருந்த உடைக்குள் மறைந்து வைத்தவாறு ரூ.34.69 லட்சம் மதிப்புடைய 1.40 கிலோ கிராம் கொண்ட தங்கச்சங்கிலியை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close