கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 07:25 pm
3-people-death-on-road-accident

பொள்ளாச்சி அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 

கோவை பொள்ளாச்சியை அடுத்த சங்ககிரி வேலாள பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் நவீன் குமார் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தை மற்றும் மாமனார் கந்தசாமியுடன்  கேரள மாநிலம் சென்றுவிட்டு சிகிச்சை முடிந்து இன்று காலை ஊர் திரும்பியுள்ளனர். காரில் பொள்ளாச்சி அருகே கருமாபுரம் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து காரில் மோதியது.

இதில், கந்தசாமி மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நவீன்குமாரை அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா போலீசார் நீண்டநேரம் போராடி காரில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநர் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close