சமூக வலைதளத்தில் பரவும் தடியடி வீடியோ: போலீஸ் மீது தவறில்லையாம்?...

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 01:14 pm
the-police-are-not-wrong

சீர்காழி அருகே புகாரை விசாரிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் திருப்பி தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பட்டவிலாகம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது தம்பி ஜான்சன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கொள்ளிடம் காவல்நிலையத்தில் சார்லஸ் அளித்த புகாரின் பேரில் விசாரிக்க சென்ற காவலர் கண்ணனை ஜான்சன் கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, தலைமறைவான ஜான்சன் வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் முனிசேகர், அவனது வீட்டு வாசலில் வைத்து காவலரை தாக்கியதற்காக தடியால் அடித்துள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருவதோடு, போலீசார் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மற்றும் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close