கோவை: குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 02:10 pm
coimbatore-suicide-attempt-by-child-and-mother

குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் 6வது வீதியை சேர்ந்த ஜெகதீஷ் (36) மற்றும் க.க.சாவடி பகுதியைச் சேர்ந்த காஞ்சனா தேவி (30) ஆகியோருக்கு திருமணம் ஆகி சுமார் நான்கு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு சாய் மகதி(3) என்ற மகள் உள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெகதீஷ் சமீப காலமாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. 

காஞ்சனா தேவி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், காஞ்சனா தேவி நேற்று முன்தினம் இரவு, மகள் சாய் மகதியை அழைத்துக் கொண்டு, க.க.சாவடி அருகேயுள்ள மசகவுண்டன்பதியில் உள்ள தன் தாத்தாவுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கிணறு அருகே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குழந்தையை கிணற்றில் வீசி விட்டு, காஞ்சனாவும் கிணற்றில் குதித்துள்ளார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தாயும், குழந்தையும் காணாமல் போனதாக கருதி உறவினர்கள் இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, இந்த இருவரின் சடலம் காக்கா சாவடியில் கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இத்கு குறித்து சம்பவம் அறிந்து வந்த க.க.சாவடி போலீசார், கிணற்றில் இருந்து இருவர்களது சடலத்தையும் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில் குடும்பத்தகராறு காரணமாகவே தற்கொலை செய்தது தெரியவந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close