அசால்ட்டா வீடு புகுந்து சிலிண்டர்கள் திருடிய நபர் கைது!

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 07:45 pm
a-man-arrested-by-cylinder-theft

சென்னையில் வீடு புகுந்து 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடி சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சென்னை எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர், அசோக் நகர், வளசரவாக்கம், போரூர், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலிண்டர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக புகார் வந்தது. காலை நேரங்களில் கேபிள் ஆபிரேட்டரை போல வரக்கூடிய நபர் வீட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி சிலிண்டர்களை திருடி தப்பியோடியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார், திருடனை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதிகளில் இருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிலிண்டரை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய காட்சிகள் பதிவாகியிருந்தது. 

இதனடிப்படையில், சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த அஷோக் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடி அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிலிண்டர் விற்பனை செய்த கடைகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close