லாரியின் கீழ் மாட்டிய இருசக்கர வாகனம்; உயிர் தப்பிய வாலிபர் !

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 08:05 pm
lorry-bike-accident-young-boys-escaped

கும்பகோணத்தில் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே பெரிய வீதியிலிருந்து கும்பகோணம் பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் ஒரு லாரி திரும்ப முயன்றது. அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது வேகமாக லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் இருந்து சாதுரியமாக துள்ளி குதித்தார். ஆனால் அவருடைய இரு சக்கர வாகனம் மட்டும் லாரியின் உள்ளே மாட்டி கொண்டது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் விபத்து ஏற்பட்டதால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த சாலை எப்பொழுதும் நெருக்கடி மிகுந்து காணப்படுவதால், இந்த வழியாக எந்த ஒரு கனரக வாகனத்தையும் அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close