தங்கள் கூட்டணியில் என்ன குறை கண்டார் மு.க.ஸ்டாலின் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் ஏற்பட்டால் கன்னியாகுமரி மீனவர்கள் பிடிக்கின்ற மீன்களை அவர்களே, துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்யக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் 40 வருடமாக அரசியலில் இருந்து வருகிறார். துணை முதல்வாராகவும் இருந்திருக்கிறார். தற்போது ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களை பேசிய வார்த்தைகள் மிகவும் அறுவறுப்பானவை. ஸ்டாலின் எங்கள் கூட்டணியில் என்ன குறை கண்டார்? எனவும் கேள்வி எழுப்பினார்.