கோவை பைபாஸ் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் !

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 12:03 pm
coimbatore-15-years-old-tree-tilted-in-bypass

கோவை சுங்கம் பைபாஸ் அருகே 15 ஆண்டுகள் பழமையான மரம் திடீரென சாலையில் விழுந்த போது, ஆட்டோ ஓட்டுநர்களும், போக்குவரத்து காவலர்களும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

கோவை சுங்கம் பைபாஸ் சாலை அருகே உள்ள சிக்னல் ஓரத்தில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான மேஃபிளவர் மரம் இருந்தது. இந்த மரமானது, இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென சாயத் தொடங்கியது. இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, போக்குவரத்து காவலர்களான ராமநாதபுரம் காவல்நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், தலைமை காவலர் ராமர் ஆகியோர் அவ்விடத்திற்கு வந்தனர். அவ்வழியில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக, வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சாலையின் ஒரு பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி வருகின்றனர். 

இதனிடையே, கோவை - திருச்சி சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அதைக் கண்டுபிடித்து வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்தி பாதிப்புகள் ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close