தேர்தலுக்கு தயார்! சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 01:30 pm
salem-collector-press-meet

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 15,835 அலுவலர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10,000 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என அந்த மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்  தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "சேலம் மாவட்டத்தில் 28,61,881 மொத்த வாக்காளர்கள், 3,288 வாக்குப்பதிவு மையங்கள், 11 துணை வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் வீடியோ கேமராவுடன் 33 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

11 வீடியோ பார்வையிடும் குழுக்கள், கணக்கெடுப்பு குழுக்கள், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆகியோரும் தயாராக உள்ளனர். மேலும், துப்பாக்கி எந்திய காவலர்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள்..

சேலம் மாவட்டத்தில் 7,824 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,533 கட்டுப்பாட்டு இயந்திரம் 4,241 VVPAT ஆகியன தயார் நிலையில் உள்ளது. 

வரும் தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை அவசியம் தேவை. தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடியில் பணிபுரிய 15,835 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 10,000 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்" என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close