கோவை: மகளிர் தினத்தை முன்னிட்டு உடல்தானம் செய்த பெண்கள்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:21 pm
coimbatore-women-donated-their-body-in-women-s-day

கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேரள மற்றும் கோவையைச் சேர்ந்த மூன்று பெண்கள் இன்று உடல்தானம் செய்தனர். 

கோவை குனியமூத்தூர் இடையர்பாளைம் பகுதியைச் சேர்ந்த அமுதா ரவிக்குமார், மாதம்பட்டியை சேர்ந்த சாந்தா மற்றும் கேரள மாநிலம் கஞ்சிகோடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் இன்று கோவை மருத்துவக்கல்லூரியில் உடல்தானம் செய்யும் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் உடல் தானம் செய்த பத்திரப்பதிவு சான்றிதழை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் வழங்கினர்.

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உடல் தானம் செய்யும் நிலையில், உயிரை பிரியும் உடல், வீணாக மண்ணில் மக்கிப்போவதற்கு பதிலாக இறந்தும் உபயோகமாக இருக்கும் வகையில் பெண்களும் உடல் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கூறுகின்றனர் உடல் தானம் செய்த பெண்கள்.

இவர்களை பின்பற்றி நாமும் உடல் தானம் செய்யலாமே..!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close