கேரள எல்லையில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை !

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 05:24 pm
mavoyist-fired-in-kerala

மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கேரள மாநிலம் வயநாடு தமிழகத்தை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய மாவட்டம்.  இந்த பகுதியில் உள்ள மைத்திரி  என்ற இடத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் வந்திருப்பத்காக  தண்டர்போல்ட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  வனப்பகுதியில்  உள்ள ஒரு தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து உணவுப்பொருட்களை தங்களது தரும்படியும், கூடுதலாக உணவுப் பொருட்கள் வாங்கி வரும்படியும் ரிசார்ட் உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

ரிசார்ட் உரிமையாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணி அளவில் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மாவோயிஸ்ட் ஒருவன் பலியானான். மற்றொரு மாவோயிஸ்ட் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இறந்த மாவோயிஸ்ட் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வலராடு பகுதியை சார்ந்த ஜலீல் என்பது தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close