பெண்கள் முன்னேற்றத்தை உறுதிபடுத்தும் மகளிர் தினம் : முன்னாள் நீதிபதி பெருமிதம்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 09:27 am
women-s-day-is-celebrated-for-women-make-improvement-and-safety

பெண்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கும் வகையிலேயே சர்வதேச மகளிர் தினம் ஏற்படுத்தப்பட்டு, உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்..

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரைட் ஆஃப் கோயம்புத்தூர் (pride of Coimbatore) மற்றும் மகளிர் நல அமைப்பு ஆகியவை சார்பில் மகளிர் தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார பெண் ஊழியர்களுக்கு புடவைகள் வழங்குதல், பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளி மகளிருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,"பெண்களின்  முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கும் வகையில் மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close