மகளிர் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:37 am
craft-exhibition-made-in-women-s

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை ஏராளமானோர் கண்டு களிப்பதுடன், பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லையில் நேற்று முன்தினம் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது. இக்கண்காட்சியினை அன்னை கிராண்ட் உரிமையாளர் பிருந்தா பால் துரை, இன்னர் வீல் தலைவர்  பிச்சம்மா ஆறுமுகம், பேராசிரியை உஷா தேவி, பாண்டிச்சேரி ஆட்டோ மொபைல் உரிமையாளர் பாரதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

நெல்லை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள், அவர்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய பொருட்களை இங்கு விற்பனைக்கு வைத்துள்ளனர்.

வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார நகைகள், துணிகள், துணிப்பைகள், பெண்கள் உபயோக பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட் என பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. நேரடி விற்பனை என்பதால் பொருட்களின் விலை மிக குறைவாக உள்ளது. இந்த கண்காட்சியினை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close