எனக்குப் பிறகு கட்சி என் சொந்தங்களிடம் செல்லாது: கமல்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:23 am
my-relatives-does-not-come-to-post-after-him

எனக்கு பிறகு தன் மகளோ, மைத்துனரோ கட்சியின் தலைமை பதவிக்கு வரமாட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இன்று மகளிர்  தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், " அரசியல் சவுகரியத்திற்காக வேறு மாநிலத்தவர்களை தமிழகத்தில் வேலைக்கு அமர்த்துவதாக குற்றம் சாட்டினார்.  மேலும், தனக்கு பிறகு கட்சியின் தலைமை பதவிக்கு எனது மகளோ, மைத்துனரோ வரமாட்டார்கள் என தெரிவித்த அவர், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close