ஐபிஎஸ் அதிகாரி என பொய் கூறி மக்களை மிரட்டி வந்த நபர் கைது!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:05 pm
a-man-arrested-for-lies

போத்தனூர் அருகே ஐ.பி.எஸ். அதிகாரி எனக்கூறி பொது பொதுமக்களை மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் சித்ரா அருகே உள்ள காளப்பட்டி கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர் சூரஜ்குமார் (33). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவியின் தாயார் பானுமதி போத்தனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில், வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதனால், வீட்டு உரிமையாளர் பானுமதியை வாடகை தருமாறு வற்புறுத்தியுள்ளார். 

ஆனால், பானுமதி வீட்டு உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தனது மருமகன் சூரஜ்குமாரை வீட்டு உரிமையாளரிடம் பேச வரவழைத்துள்ளார். அப்போது,  சூரஜ்குமார் தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி எனக் கூறி வீட்டு உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அக்கம் பக்கத்தினரிடமும் இதேபோன்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் போத்தனூர் போலீஸாரிடம் நேற்று புகார் அளித்தனர். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் சூரஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஐ.பி.எஸ். அதிகாரி என பொய் கூறி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சூரஜ்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close