மகளிர் தினம்: பெண்களுக்கு இலவச பெட்ரோல்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:48 pm
women-s-day-free-petrol-for-women

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா நகர் மூன்றாம் அவென்யூவில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதலில் வந்த 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் பெண்களின் சாலை பாதுகாப்பு கருதி அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலிசபெத், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக மகளிர் தினத்தன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வருங்காலங்களிலும் பெண்களை ஊக்குவிக்கும் பல செயல்களை செய்ய தங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close