சென்னையில் போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்தவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:42 pm
lsd-stamp-sales-man-arrested-in-chennai

சென்னை ஆலந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் எல்.எஸ்.டி ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆலந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வேதகிரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கார்த்திக் ஆனந்த் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் எல்.எஸ்.டி எனப்படும் போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 LSD போதை ஸ்டாம்புகளையும், 45 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கார்த்திக் ஆனந்திற்கு இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன உள்ளிட்ட தகவல்களை விசாரிப்பதற்காக அவரை ஆலந்தூர் காவல்துறையினர், போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கார்த்திக் ஆனந்திடம் விசாரணை  நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close