குறி சொல்லும் போது, பூஜை மரத்தில் இருந்து கீழே விழுந்த பூசாரி உயிரிழப்பு.. அதிர்ச்சி வீடியோ...!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:34 pm
the-fallen-down-priest-dies

பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லும் போது 20 அடி மரத்தில் இருந்து தவறி விழுந்து கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள ஊர் பொது கோயிலான ஐயாசாமி திருக்கோயில் மிகவும் பழமையானதாகும். இக்கோயிலில் அம்மாவாசை பௌர்ணமி நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் ஐயாசாமி என்பவர் பூஜை செய்து வந்தார்.  ஆண்டு தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

அப்போது நள்ளிரவில் அக்கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கு கோவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பூஜை செய்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு  பக்தர்களுக்கு  குறி சொல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும்  நிகழ்ச்சி நடைபெற்ற போது பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறி படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கம்பத்திலிருந்து பூசாரி கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த அவரை பக்தர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூசாரி அய்யாசாமி உயிரிழந்தார். இச்சம்பம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close