மக்கள் பணத்திற்காக வாக்குகளை விற்கக் கூடாது: சரத்குமார்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 05:20 pm
people-should-not-sell-votes-for-money

மக்கள் பணத்திற்காக வாக்குகளை விற்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் விஜயகாந்த் என்னுடைய நண்பர் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஏதாவது இருக்கலாம் எனவும் கூறினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என கடந்த ஆறாம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர் மக்கள் தங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். 

மேலும், அதிமுக  - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் கஜா புயலுக்கு வராத பிரதமர் மோடி தற்போது அரசியலுக்காக மூன்று முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இந்த வருகை வாக்கு வங்கிக்காக தான் எனவும் தெரிவித்தார். மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மையமாக கொண்டு எங்களது பிரச்சாரம் அமையும் எனவும், மக்கள் பணத்திற்காக வாக்குகளை விற்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர்,  மிகப் பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏன்  தனித்துப் போட்டியிட வில்லை? போருக்குச் சென்றால் வெற்றி தோல்வி வரும் அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் தனித்து போட்டியிட பயப்படுகிறது. தமிழகத்தில் லேடியா, மோடியா என்று பேசிய காலம் போய், மோடியின் அருகிலேயே நின்று அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவு தான் என்று கருதுவதாக கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close