லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:47 am
power-department-officers-are-arrested-by-bribed

திருச்சியில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள்  இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் புதிய மின்இணைப்பு வேண்டி பதிவுசெய்திருந்தார். புதிய மின்இணைப்பு வேண்டுமென்றால் தங்களுக்கு ரூ.70 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசந்தர் மற்றும் வணிகப்பிரிவு ஆய்வாளர் வீரசரவணபெருமாள் ஆகியோர் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் இது குறித்து திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் நேற்று டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச  ஒழிப்பு போலீசார் குமார் என்பவரிடம் ரூ.20,000 மதிப்புள்ள ரசாயனம் கலந்த நோட்டுகளை கொடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுக்குமாறு கூறினர்.  

அதேபோல், குமார் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தபோது, மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அதிகாரிகளான பாலச்சந்தர், வீர சரவணபெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close