குடிபோதையில் நிகழ்ந்த வெறிச்செயல்: தந்தையை கொன்ற மகன் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 11:10 am
son-arrested-for-killing-father

குடிபோதையில் தாயை கத்தியால் குத்திவிட்டு, தந்தையின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வினோத் எம்.பி.ஏ. முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத்தை பெற்றோர்கள் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத், குடிபோதையில் தாயை கத்தியால் குத்திவிட்டு, தந்தையின் மீது அம்மிக்கல்லை போட்டுள்ளார். இதில் தந்தை செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாய் விஜயலட்சுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர். செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close