மதுரை பழங்காநத்தம் ரயில்வே பகுதியில் குண்டு வெடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:31 pm
bomb-explosion-in-madurai

மதுரை பழங்காநத்தம் தண்டவாளப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மதுரையில் இருந்து பழனி வரை  அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழங்காநத்தம் அருகே ரயில்வே பணிகள் நடைபெறும் இடத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதில் கற்கள் சிதறி அருகில் இருந்த சிலர் காயமடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, சுமார் 100 கிராம் வெடிமருத்து கொண்ட வெடிப்பொருள் வெடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருவதோடு, வெடிப்பொருள் நாட்டு வெடி  குண்டா? அல்லது வேறு ஏதுமா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close