சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்: கனகராஜ்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 01:35 pm
the-reason-for-dmdk-s-fall-is-the-vijayakanth-is-opposed-to-jayalalithaa-in-the-assembly

அரசியல் நாகரீகம் தெரியாமல், சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழகத்தை சேர்ந்த 37 எம்.பி.க்களால் எந்த பலனில்லை என்று கூறியது, அந்தம்மாவினுடைய சொந்த கருத்து. தே.மு.தி.க. கட்சியின் கூட்டணி நிலைபாடு குறித்து தமிழ்நாடே பார்த்து கொண்டு இருக்கிறது. 

கூட்டணியில் இடம் பெற இங்கொன்றும், அங்கொன்றும் என தே.மு.தி.க. இருபக்கமும் பேசுகின்றது. தே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு. அக்கட்சி நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும். 

அரசியல் நாகரீகம் தெரியாமல், சட்டமன்றத்தில் விஜயகாந்த் ஜெயலலிதாவை எதிர்த்து  நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். தே.மு.தி.க. கூட்டணியால் 500-ல் இருந்து 1,000 ஒட்டு வரை தான் கிடைக்கும். அம்மாவின் ஆட்சியோ சூப்பர் ஆட்சி. எடப்பாடியின் ஆட்சியோ சூப்பரோ சூப்பரான ஆட்சி " இவ்வாறு கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close