போலி விசாவில் திருச்சி வந்த இருவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:05 pm
two-people-arrested-in-fake-visa

மலேசியாவில் இருந்து போலி விசாவில் திருச்சி வந்த இருவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் கொலவை பீர்பூர் பகுதியைச் சேர்ந்த  ஈஸ்வரய்யா(38), நிசாம்பாத் பகுதியைச் சேர்ந்த பாய்காரி சந்தோஷ் (22) ஆகிய 2 பேரும் சுற்றுலா விசாவில் மலேசியா சென்றனர். மேலும் குறிப்பட்ட நாட்களைக் கடந்து அங்கு தங்கியிருந்த நிலையில் அந்த விசா காலாவதியாகி நாடு திரும்ப இயலாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர்கள் இருவரும் போலி முத்திரையிடப்பட்ட விசாவை ஏற்பாடு செய்துகொண்டு, அதை வைத்துக்கொண்டு நாடு திரும்ப முடிவெடுத்தனர். அவ்வாறு அவர்கள் திருச்சி வந்தடைந்தபோது, குடியுரிமை அதிகாரிகளின் சோதனையின் போது அவர்களிடம் சிக்கினர். 

இதையடுத்து குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீஸார், ஈஸ்வரய்யா மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close