தேமுதிக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்: ஜி.கே.மணி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:27 pm
dmdk-should-come-to-aiadmk-alliance-gkmani

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணை வேண்டும் என பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி விருப்பம் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர், அதிமுக - பாமக கூட்டணி மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதாகவும், ராமதாஸ் வெற்றி கூட்டணியை அமைத்துள்ளார் என பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார். 

பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் நாட்டின் வளர்ச்சி பற்றி விரிவாக பேசியுள்ளதாக குறிப்பிட்ட அவர், வெற்றிக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பாடுபடும் எனவும், கூட்டணி கட்சிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணி குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தேமுதிக கூட்டணிக்கு வர வேண்டும் என்றும், பாமகவுடன் முதலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதே தேமுதிகவின் கூட்டணி  பேச்சுவார்த்தைக்கு தாமதம் என பிரேமலதா கூறியது அவரின் சொந்த கருத்து என கூறினார். 

தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அதிமுக விரைவில் முடிவெடுக்கும் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் வியூகம் மக்களின் வளர்ச்சியை நோக்கி  இருக்கும் எனவும், பூரண மது விலக்கு அமல்படுத்த முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close