கோவையில் போலியோ சொட்டு மருத்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 12:12 pm
polio-drop-camp-stared-in-covai

கோவை அரசு மருத்துவமனையில்  நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.  இந்த முகாமில்  3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட உள்ளது.

கோவையில் போலியோ சொட்டு மருந்து வழங்க கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும் நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பஸ் நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்  சொட்டு மருந்து வழங்க 24 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை பொது சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,ரோட்டரி சங்கங்கள் என சுமார் 6324 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருத்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அசோகன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார்,அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close