அதிமுக கூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம் ;அமைச்சர் செல்லூர் ராஜூ:

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 12:26 pm
polio-drop-camp-in-madurai

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு: தமிழ் நாடு முழுவதும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மதுரையில் 15 நடமாடும் குழுக்கள் செயல்படுகின்றன எனக் கூறினார். மேலும் தேமுதிக பொறுத்த வரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். விரைவில் அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள் என்றார்.  கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,கூட்டணி  எந்த நேரமும் மாறலாம் என கூறினார். தொடர்ந்து, ஊடகங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது. நான் பிரேமலதா விஜயகாந்த் பேசியதை முழுமையாக பார்க்கவில்லை என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close