பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:10 pm
3-people-died-in-accident

பெரம்பலூர் அருகே பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்த கலியன், பரமேஸ்வரி, காவேரி, மருதாம்பாள், சோலையம்மாள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் சமயபுரம் மரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் என்ற இடத்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது.

இதில் கலியன், பரமேஸ்வரி, காவேரி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close