இடைத்தேர்தலில் பண மழை பொழியும்: நடிகை கஸ்தூரி

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 03:36 pm
will-money-rain-in-the-by-elections-actress-kasthuri

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பண மழை பொழியும் என நடிகை கஸ்தூரி வெளிப்படையாகக் கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் நடைபெற்ற நுகர்வோர் குரல் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர்," நாட்டு மக்களுக்கு எப்போதும் இல்லாத அளவு இந்த மாதத்தில் அதிகப்படியான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தமிழக அமைச்சர்கள் அப்பா என கூறுவதை கொச்சையான விஷயமாக கருதுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவு தராவிட்டால் அவர்களின் நிலை அகல பாதாளத்தில் போகும் என்ற காரணத்தால் மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் தேமுதிகவின் தற்போதைய நிலைப்பாடு காலதாமதமாக உள்ளது. அந்த கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தவிர மற்றவர்கள் முடிவு எடுக்கும் நிலைக்கு அந்த கட்சி சென்று உள்ளது. இது அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. நடிகர் கமல்ஹாசன், சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் எது நடந்தாலும் பரவாயில்லை மக்களின் பிரச்சினைகளுக்காக களம் இறங்கி போராட வேண்டும் என கூறியிருப்பது நல்ல அம்சம். 

தமிழகத்தில் ஏற்கனவே ஈ.சி.ஆரில் பல சொகுசு விடுதிகள் மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் மீதமுள்ள சொகுசு விடுதிகளும் தெரியவரும். அப்போது பணமழையும் பொழியும்" இவ்வாறு அவர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close