அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க., த.மா.க., இணைய வேண்டும்: மதுரை ஆதினம்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 04:17 pm
dmdk-tmc-to-join-aiadmk-madurai-adheenam

அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைய வேண்டும் என மதுரை ஆதினம் கேட்டுக்கொண்டுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு சென்று ஆதீனம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், இப்போது தேர்தல் களத்தில் பாரதத்தாயின் ஆசிபெற்ற பாஜகவின் வேட்பாளர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற  ராகுல் காந்திக்கும் இடையே தான் போட்டி நிலவுகின்றது. தர்மத்தை காக்க, தேசத்தை காக்க மோடி தலைமையில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கும் போது, ஆதீனம் போன்ற ஆன்றோர்களும் இவ்வாறு தான் கூறுவார்கள் என கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம், தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதேபோல் இந்திய நாட்டை பாதுகாக்கக் கூடியவர் பிரதமர் மோடி தான். மோடி பிரதமராக இருப்பதால் தான் அண்டை  நாடுகள் நம்மை ஆதரிக்கின்றன. ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணியை மக்கள் வெற்றிப்பெற செய்ய வேண்டும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் தமாக
ஆகிய கட்சிகள் இணைய வேண்டும் என அப்போது மதுரை ஆதினம் கேட்டுக்கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close