வாழைத்தார் விலை அதிகரிப்பால் விற்பனை வீழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:46 pm
the-fall-in-banana-sales-is-due-to-the-increase-in-prices

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக ஏற்பட்ட விளைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை சரிவடைந்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயமே முதன்மையான வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு பயிரடப்படும் நேந்திரன், ரொபஸ்டா, செவ்வாழை, கதிலி உள்ளிட்ட பழவகைகளின் தரம் மற்றும் சுவை காரணமாக வரவேற்பு அதிகம்.

இதன் காரணமாக, இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இவை அனைத்தும் இம்மாதம் அறுவடை செய்யப்பட வேண்டியவை. மேலும், அவ்வப்போது வீசிய சூறாவளிக்காற்றில் சிக்கியும் மீதமிருந்த தப்பிப் பிழைத் வாழைமரங்கள், பல முறிந்து போயின. இதனால், இப்பகுதியில் சுமார் 60 சதவிகிதம் வாழை விவசாயம் அழிந்து போனது.

அறுவடை சரிந்து விட்ட காரணத்தால், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் வாழைத்தார் ஏல விற்பனை மையங்களுக்கு தற்போது, வாழைத்தார் வரத்து பெருமளவு குறைந்து உள்ளது.

இதையடுத்து வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அதிக விலை காரணமாக கேரளாவில் இருந்து கொள்முதல் செய்ய வரும் வாழை வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து, விற்பனையும் சரிந்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close