'லக்ஸ் டிரைவ் லைவ்-2019' சாகச நிகழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:49 pm
lux-drive-live-2019-adventure

'மெர்சிடிஸ் பென்ஸ்' இந்தியா நிறுவனம் சார்பில், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு,கோவையில் 'லக்ஸ் டிரைவ் லைவ்-2019' எனும் வினோத நிகழ்ச்சி, நடைபெற்றது.

கார்கள் உற்பத்தியில் பிரபல நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம்  தனது 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் வினோத நிகழ்ச்சி நடத்தியது. லக்ஸ் டிரைவ் லைவ் 2019 என அழைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, செட்டிபாளையத்தில் உள்ள 'கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே'யில் நடைபெற்றது.

இதில்  ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான 'மெர்சிடிஸ்' கார்களை ஓட்டி சாகசம் செய்தனர். இதில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணர் ரன்வீர் பிரார் கூறுகையில்,''25ம் ஆண்டு விழாவை ஒட்டி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்,சிறந்த உணவு மற்றும் இசை நிகழ்ச்சியுடன் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், கோவையில் ஆடம்பர கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், 'செல்ப் டிரைவ்' பிரிவில், எஸ்யூவி உள்ளிட்ட அனைத்து விதமான 'மெர்சிடிஸ் பென்ஸ்' கார்களும் இந்நிகழ்ச்சியில் இடம்  பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close