வடமதுரை துணை மின்நிலைய மின்மாற்றியில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:34 am
transformer-blast-at-vadamadurai-sub-power-station

கோவை வடமதுரை துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது. உதகையில் உள்ள கெத்தை நீர் மின் நிலையம், குந்தா நீர் மின் நிலையம், பைகாரா நீர் மின் நிலையம் உள்ளிட்டவைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் இங்கு கொண்டுவரப்பட்டு கோவை, பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மின் ஊழியர்கள் உடனடியாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

எனினும், இந்த தீ விபத்து காரணமாக கோவையில் பெரும்பாலான இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் அதிக மின் உபயோகம் காரணமாக மின்மாற்றி வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close