புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை எதிர்த்து களமிறங்கும் புதியக் கட்சி!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:12 am
a-new-party-named-pmk

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை தென்காசி தொகுதியில் கட்டாயம் தோற்கடிப்போம் என பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

சேலம் 3 ரோடு பகுதியில், பனங்காட்டு மக்கள் கழகம் என்ற புதிய கட்சி  மற்றும் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் சுபாஷ் பண்ணையார், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை புதிய தமிழகம் கட்சியும், அதன் தலைவரும் தவறாக பயன்படுத்தி நடார் சமூகத்தினரை தாக்கி வருவதாகவும், அவரால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும்,  அவர் அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கொலை செய்து, கொலைப்பழி சுமப்பதற்கு அவர் காரணமாக உள்ளார். இறந்து போனவரின் சடலத்தை வைத்து கட்சி நடத்தும் ஒருவர் தான் கிருஷ்ணசாமி. முழுக்க முழுக்க அவரை எதிர்த்து தான் எங்கள் பயணம் தொடரும். அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை கட்டாயம் தோற்கடிப்போம். எங்கள் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close