தாயுடன் கள்ள தொடர்பு - சந்தேகத்தில் மகனை கொன்ற தந்தை!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:16 pm
the-father-killed-his-son

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தந்தையே மகனை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதி சக்திவேல்(50), லோகநாயகி. இவர்களுக்கு சதிஷ்(22), என்ற மகனும், மேலும் ஓர் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவிக்கும், மகனுக்குமிடையே கள்ள தொடர்பு இருப்பதாக கூறி சக்திவேல் அவரது மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் மனைவி வேலைக்கு செல்லும்போது அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து செல்வது போன்ற செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

சந்தேகம் அதிகமானதால் ஆத்திரமடைந்த சக்திவேல், இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகன் சதீஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். சதீஷின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க முயன்ற லோகநாயகியையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் சதீஷ் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லோகநாயகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

தப்பியோட முயன்ற சக்திவேலை அப்பகுதி மக்கள் மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ராயலா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close