நிர்மலாதேவியை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:51 pm
nirmala-devi-to-appear-in-the-court-tomorrow-court

கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை நீதிமன்றத்தில் நாளை பிற்பகல் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நிர்மலாதேவி வழக்கில் 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தவில்லை எனவே முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சுகந்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, நிர்மலா தேவிக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை எனவும்  அவர் தற்போது எவ்வாறு உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.

வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, " நிர்மலாதேவியை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close