கிணற்றில் தத்தளித்த புள்ளிமான் - பத்திரமாக மீட்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:40 pm
deer-fallen-into-the-well

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாயை அடுத்த பொன்னணியாறு அணைப்பகுதியில் புள்ளிமான்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று சின்ன அணைக்கரைப்பட்டியில் உள்ள அருளப்பன் என்பருக்கு சொந்தமான 50 அடி கிணற்றில் இருந்த சத்தம் வந்ததை கேட்ட ஒருவர் உள்ளே பார்த்தபோது, புள்ளி மான் ஒன்று நீந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, அவர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மானை மீட்க முயன்றனர். ஆனால் பலனில்லாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து கயிறு கட்டி மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மானிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close