அதிகாரிகளின் அலட்சியம்: விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 09:04 am
bus-accident-in-trichy

திருச்சி சமயபுரம் அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி அருகே அன்பில் கிராமம் வரை  செல்லும்  அரசுப் புறநகர்  பேருந்து நேற்றிரவு எண்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது.. பேருந்து சமயபுரம் அருகே உள்ள கன்னிமார்தோப்பு என்ற இடத்தில் வந்தபோது பேருந்தின் வேகக்கட்டுப்பாட்டு கருவி இரண்டாக உடைந்தது. இதில் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. 

இதில் 30 க்கும் மேற்பட்ட  பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.  அரசு பேருந்துகளை சரிவர பராமரிப்பு செய்யாமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close