கோவில் பணியாளர்களை தாக்கிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 08:59 am
trichy-temple-workers-attacked

கோவிலுக்குள் புகுந்து பணியாளர்களை தாக்கிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே சிறுகனூரில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவில் தங்களது தான் சொந்தம் என உரிமைக் கொண்டாடியப்படி, ஒரு கும்பல் இன்று காலை கோவிலுக்குள் புகுந்தது.

அப்போது அங்கு பணியிலிருந்து  மூன்று பேரை தாக்கிய அந்த மர்ம கும்பல், பணியாளர்களை கோவிலுக்குள் வைத்து பூட்டும் போட்டுவிட்டு சென்றது.

இதுதொடர்பாக, கோவில் செயல் அலுவலர்  அளித்த புகாரின் அடிப்படையில், பணியாளர்களை தாக்கிய, 6 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close