நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எத்தனை? உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:55 am
how-many-criminal-cases-are-pending-madurai-court

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் எத்தனை  குற்றவியல் வழக்குகள்  நிலுவையில் உள்ளன என பதிலளிக்க, தமிழக உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்."அதில் 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, 2010-11 ஆகிய ஆண்டுகளில் 29 குற்றவியல் வழக்குகள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. 

இதனால் குற்ற வழக்கில் சந்தேகத்தின் பேரில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் விசாரணை முறையாக நடைபெறுவது இல்லை. அவற்றில் இறுதி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவது இல்லை.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். பிற வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. இதனை முறையாக அமல்படுத்தக்கோரி உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.  நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் எத்தனை குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலர் மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close