திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 03:46 pm
thirupaddur-temple-festival


திருச்சி திருப்பட்டூரில் குடி கொண்டுள்ள‌ அருள்மிகு பிரம்மசம்பத்கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வரும் 20 ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி கொடியேற்றும் விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை 6 மணிக்கு பூர்வாங்கபூஜைகள், கணபதி ஹோமம், ரிஷப யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.  அதன் பின்னர் 2 -ஆம் நாளில் சுவாமி பூதவாகனம், மயில் வாகனத்திலும், 3 -ஆம்நாள் கைலாச மற்றும் அன்ன வாகனத்திலும், 4 -ஆம் நாள் சேஷ மற்றும் மயில் வாகனத்திலும் 5-ஆம் நாள் தனி்த் தனி வாகனங்களில் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நடைபெற உள்ளது.

 தொடர்ந்து, 6 -ஆம்நாள் யானை வாகனம்,புஷ்ப பல்லக்கிலும் ்7 ம் நாள் கற்பகவிருட்சம். மற்றும் காமதேனு வாகனத்திலும் 8ம் நாள் குதிரை வாகன பல்லாக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.

முக்கிய நிகழ்வான 9 ம் நாள் வருகின்ற 20ந்தேதி  பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது. பங்குனி தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் இன்று கொடியேற்றும் விழா  நடைபெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close